ஈத்தாமொழியை அடுத்துள்ள ஈயன்விளை கேட்டவரம் தரும் காலசாமி கோயில் கொடை விழா நடந்தது. விழாவையொட்டி அங்கு நடைபெற்ற சமபந்தி நிகழ்ச்சியை அதிமுக மாவட்ட மருத்துவ அணி செயலாளரும்,குமரி மாவட்ட அதிமுக தொண்டர்களின் எதிர்காலமுமான டாக்டர் சி.என்.ராஜதுரை அவர்கள் தொடங்கி வைத்தார்.விழாவில் கோட்டார்.கிருஷ்ணன்,தெங்கம்புதூர் பேரூராட்சி செயலாளர் முருகேசன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக அவைத்தலைவர் பா.தம்பிதங்கம்,மாவட்ட இலக்கிய அணி துணைச்செயலாளர் வி.எஸ்.வினோத்,சாமிதோப்பு ஊராட்சி செயலாளர் என்.பார்த்தசாரதி,தர்மபுரம் ஊராட்சி கழக செயலாளர் என்.எம்.செல்வகுமார்,தென்தாமரைகுளம் பேரூர் செயலாளர் தாமரை.தினேஷ், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் விஜயன்,வக்கீல்.ஆதிலிங்கம்,சிவா உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






